Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

போலிக் குத்தகைகள் மூலம் 900 மில்லியன் பவுண்ட் திரட்டியது மென்செஸ்ட்டர் சிட்டி: பிரிமியர் லீக் தீர்ப்பு

வாசிப்புநேரம் -
போலிக் குத்தகைகள் மூலம் 900 மில்லியன் பவுண்ட் திரட்டியது மென்செஸ்ட்டர் சிட்டி: பிரிமியர் லீக் தீர்ப்பு

கோப்புப் படம்: AFP/Scott Heppell

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) காற்பந்து அணி போலிக் குத்தகைகள் மூலம் நிதி திரட்டியதாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் கூறியிருக்கிறது.

10 ஆண்டுகளாக 900 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுக்கும் (சுமார் 1.5 பில்லியன் வெள்ளி) அதிகமான தொகையை அணி கள்ளத்தனமாகத் திரட்டியதாக சுயேச்சை விசாரணைக் குழு தீர்ப்பளித்தது.

2009 முதல் 2018 இடையே அணி அதன் வருவாயை உண்மையைவிட உயர்த்திக் காட்டியதாகவும் செலவைக் குறைத்துக் காட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

லீக்கின் நிதி விதிமுறைகளை மீறியதாக அணிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விசாரணையில் நிரூபிக்கப்பட்டன.

விசாரணைக்கு ஒத்துழைக்காததன் தொடர்பில் 4 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் மூன்று நிரூபிக்கப்பட்டன.

எத்தகைய தண்டனை விதிக்கப்படும் என்பது இன்னும் தெரியவில்லை.

பிரிமியர் லீக்கில் நிதி நிர்வாகம், போட்டித்தன்மை ஆகியவை பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்