Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தொடர்ந்து 5வது முறையாகத் தோல்வியுற்ற மென்செஸ்ட்டர் சிட்டி

வாசிப்புநேரம் -

52 ஆட்டங்களாகச் சொந்த அரங்கில் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த மென்செஸ்ட்டர் சிட்டி நேற்று பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் தோல்வியுற்றுள்ளது.

அது 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பரிடம் தோல்வியைத் தழுவியது. அனைத்துப் போட்டிகளிலும் தொடர்ந்து 5வது முறை மென்செஸ்ட்டர் சிட்டி தோல்வியடைந்துள்ளது.

"கடந்த 8 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சூழலைச் சந்தித்ததில்லை. இதைக் கடந்து மீண்டும் வெற்றி பெற முயற்சி செய்யவேண்டும்," என்று அணியின் நிர்வாகி பெப் கார்டியோலா கூறினார்.

தற்போது பிரிமியர் லீக் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ள மென்செஸ்ட்டர் சிட்டி அடுத்த ஆட்டத்தில் முதல் நிலையில் உள்ள லிவர்பூலைச் சந்திக்கும். அதில் தோல்வியுற்றால், மென்செஸ்ட்டர் சிட்டி இந்த முறை பிரிமியர் லீக் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறையலாம் என்று நம்பப்படுகிறது.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்