Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

6 பருவங்களில் 5ஆவது முறையாக EPL பட்டத்தை வென்றது மென்செஸ்ட்டர் சிட்டி

வாசிப்புநேரம் -

விளையாட்டு இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் இன்னமும் 3 மூன்று ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) லீக் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது. 

பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆர்சனல் (Arsenal) நோட்டிங்ஹெம் போரெஸ்ட் (Nottingham Forrest) அணியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து சிட்டியிடம் லீக் பட்டம் சென்றது. 

ஆறு பருவங்களில் ஐந்தாவது முறையாக சிட்டி  பட்டத்தை வென்றது.

பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் ஆர்சனல், மூன்றாவது இடத்தில் நியூகாசல் (Newcastle), நான்காம் இடத்தில் மென்சஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United), ஐந்தாவது இடத்தில் லிவர்பூல் (Liverpool) உள்ளன. 

பருவம் முடிவை நெருங்கும் நிலையில் சவுத்ஹெம்ப்ட்டன் (Southampton) லீக்கில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. 

மேலும் 2 அணிகள் வெளியேறவிருக்கின்றன. எவர்ட்டன் (Everton), லீட்ஸ் யுனைட்டட (Leeds United)  லெய்ஸ்ட்டர் (Leicester) ஆகியவை அதற்கான போராட்டத்தில் தொடர்கின்றன. 


 

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்