Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மென்செஸ்டர் யுனைட்டட், கிறிஸ்ட்டல் பேலஸ் அணியினர் மோதிய விவகராம் - குற்றஞ்சாட்டியது காற்பந்துச் சங்கம்

வாசிப்புநேரம் -

மென்செஸ்டர் யுனைட்டட் (Manchester United), கிறிஸ்ட்டல் பேலஸ் (Crystal Palace) அணியினர் பொருதிய ஆட்டத்தில் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 

FA எனப்படும் காற்பந்துச் சங்கம் அந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது.  

சென்ற சனிக்கிழமை (4 பிப்ரவரி) நடந்த ஆட்டத்தின்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் யுனைட்டட் அணியின் கெசமிரோ (Casemiro). கிறிஸ்ட்டல் பேலஸின் வில் ஹியூஸின் (Will Hughes) கழுத்தை நெறித்தார். 

அதன் பின்னர் 2 அணியினரும் சண்டையிட்டனர். 

கெசமிரோவிற்கு உடனடியாகச் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 

அந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைட்டட் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க இரு அணிகளுக்கும் இம்மாதம் (பிப்ரவரி 2023) 13ஆம் தேதி வரை அவசாகம் தரப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்