சொந்த அரங்கில் மென்செஸ்ட்டர் யுனைட்டட் படுதோல்வி - மாயாஜாலம் செய்ய முடியாது என்கிறார் நிர்வாகி எரிக் டென் ஹாக்
வாசிப்புநேரம் -
மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) அணியைப் பழைய வேகத்துக்கு உடனே கொண்டுவர மாயாஜாலங்கள் எதுவும் செய்ய முடியாது என அணி நிர்வாகி எரிக் டென் ஹாக் (Erik ten Hag) கூறியுள்ளார்.
லிவர்பூல் (Liverpool) அணிக்கு எதிரான இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் சொந்த அரங்கில் யுனைட்டட் 0-3 என்ற கோல் கணக்கில் படுதோல்வியடைந்த ஆட்டத்தை அடுத்து டென் ஹாக் அவ்வாறு சொன்னார்.
புதிய பருவம் தொடங்கி 3 ஆட்டங்கள் மட்டுமே முடிந்துள்ளது; ஆனால் அதற்குள் டென் ஹாக் கடும் நெருக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக AFP செய்தி கூறுகிறது
கடந்த வாரம் பருவத்தின் 2ஆவது ஆட்டத்தில் யுனைட்டட் 1-2 என்ற கோல் கணக்கில் பிரைட்டனிடம் (Brighton) தோற்றது.
அந்தத் தோல்வியிலிருந்து முழுமையாக மீள்வதற்குள் லிவர்பூலிடம் படுதோல்வியடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கூட்டியிருக்கிறது யுனைட்டட்.
அந்த ஏமாற்றத்துக்குப் பதிலளித்த டென் ஹாக், தாம் மாயாஜால வித்தைகள் செய்து அணியை உடனடியாக மாற்றிவிட முடியாது என்றார்.
"இங்கிலீஷ் பிரிமியர் லீக் பருவம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. மீண்டும் புதிய அணியைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது".
"அணி ஆட்டத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். பருவம் முடியும்போது மேலுமொரு கிண்ணத்தைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார் அவர்.
இந்தப் பருவத்தில் நடந்துமுடிந்துள்ள 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்வி எனப் புள்ளிப் பட்டியலில் யுனைட்டட் 14ஆவது இடத்தில் உள்ளது.
நடப்பு வெற்றியாளரான சிட்டி 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முன்னணியில் இருக்கிறது.

ஆதாரம் : AFP