Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Manchester United அணியை வாங்க விரும்பும் கத்தார் முன்னாள் பிரதமரின் மகன்

வாசிப்புநேரம் -

கத்தார் முன்னாள் பிரதமரின் மகன் மென்செஸ்ட்டர் யுனைடெட் (Manchester United) அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

கத்தாரின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஷேக் ஹமது பின் ஜசிம் பின் ஜபர் அல் தானியின் (Sheikh Hamad bin Jassim bin Jaber Al Thani) மகன், ஷேக் ஜசிம் பின் ஹமது அல் தானி (Sheikh Jassim Bin Hamad Al Thani). அவர் QIB எனும் உள்நாட்டு வங்கியின் தலைவர்.

காற்பந்துக் குழு, பயிற்சி நிலையம், விளையாட்டு அரங்கம் ஆகியவை மீது முதலீடு செய்ய அவரது அறக்கட்டளை முன்வரும்;

மென்செஸ்ட்டர் அணி எந்தக் கடனையும் எதிர்நோக்கத் தேவையில்லை என்று ஷேக் ஜசிமின் பேச்சாளர் கூறினார்.

ஷேக் ஹமது பேரிஸ் செயின்ட் - ஜெர்மைன் (Paris Saint-Germain) அணியின் உரிமையாளர். 

ஒரே உரிமையாளருக்குக் கீழ் இரண்டு குழுக்கள் விளையாடுவதை Champions League போட்டி அனுமதிப்பதில்லை. 

இந்நிலையில், ஷேக் ஜசிம் எவ்வாறு மென்செஸ்ட்டர் அணியை வாங்குவார் என்பது தெரியவில்லை.

அணியை வாங்கப் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் செல்வந்தர் ஜிம் ரேட்கிலிஃப்(Jim Ratcliffe), சவுதி அரேபிய அதிகாரிகள் ஆகியோர் அவர்களில் சிலர். 

அணியின் மதிப்பு 8.42 பில்லியன் டாலராக இருக்கும் அதன் பெரும்பாலான உரிமையை வைத்திருக்கும் Glazer குடும்பம் எதிர்பார்க்கிறது. 

-Reuters

ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்