Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச்சென்ற மென்செஸ்ட்டர் யுனைட்டெட்

வாசிப்புநேரம் -
6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச்சென்ற மென்செஸ்ட்டர் யுனைட்டெட்

(படம்: Adrian DENNIS / AFP)

Carabao கிண்ணப் போட்டியின் இறுதிச்சுற்றில் பிரிட்டிஷ் அணிகளான மென்செஸ்ட்டர் யுனைட்டெட் (Manchester United), நியூகாசல் யுனைட்டட் (Newcastle United) ஆகியவை பொருதிய ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் மென்செஸ்ட்டர் யுனைட்டெட் வெற்றிபெற்றது. 

அணியின் நிர்வாகி எரிக் டென் ஹாகின் (Erik ten Hag) தலைமையில் மென்செஸ்ட்டர் யுனைட்டெட் பெற்றுள்ள முதல் கிண்ணம் இது. அவர் அணியின் நிர்வாகியாகப் பொறுப்பேற்று 10 மாதங்கள் கடந்துள்ளன. 

6 ஆண்டுகளுக்குப் பிறகு மென்செஸ்ட்டர் யுனைட்டெட் அதன் முதல் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றிருக்கிறது.

லண்டனின் வெம்ப்லி (Wembley) விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் 33ஆவது நிமிடத்தில் மென்செஸ்ட்டர் யுனைட்டெட் விளையாட்டாளர் காசிமிரோ (Casemiro)  முதல் கோலை அடித்தார்.

39ஆவது நிமிடத்தில் மார்க்கஸ் ராஷ்ஃபோர்ட் (Marcus Rashford) அணியின் இரண்டாவது கோலை அடித்தார். 

அதன் பின்னர் அது நியூகாசல் யுனைட்டெட் அணியின் ஸ்வென் போட்மன் (Sven Botman) அடித்த சொந்த கோல் என்று முடிவு செய்யப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்