உலகத் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த F1 ஓட்டுநர் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென்
F1 கார் ஓட்டுநர் 27 வயது மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் (Max Verstappen) உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடந்த Grand Prix போட்டியில் 5ஆம் இடம் வந்ததை அடுத்து அவர் உலகத் தரவரிசையில் முன்னேறினார்.
தொடர்ந்து நாலாவது முறை முதலிடம் பிடித்துள்ள அவர் நட்சத்திர ஓட்டுநர்களின் பட்டியலில் சேர்ந்திருப்பதை வல்லுநர்கள் மெச்சுகின்றனர்.
வெர்ஸ்டாப்பெனுக்கு முன் ஐவர் மட்டுமே அந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
அவர்களில் லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton), செபாஸ்டியன் வெட்டல் (Sebastian Vettel) முதலியவர்களும் அடங்குவர்.
"17 வயதில் F1 காரை ஓட்டுவதற்கு மட்டுமே ஆர்வமாய் இருந்தேன். இப்போது இந்த நிலைக்கு வந்திருப்பதை நம்பமுடியவில்லை," என்று வெர்ஸ்டாப்பென் கூறினார்.