Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரெஞ்சுக் காற்பந்து லீக் - எம்பாப்பே தொடர்ந்து 4ஆவது முறையாகச் சிறந்த விளையாட்டாளராகத் தேர்வு

வாசிப்புநேரம் -
பிரெஞ்சுக் காற்பந்து லீக் 1இன் சிறந்த விளையாட்டாளராக கிலியான் எம்பாப்பே தொடர்ந்து 4ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

PSG அணியைச் சேர்ந்த அவர் இந்தப் பருவத்தில் 28 கோல்களைப் புகுத்தியுள்ளார்.

5ஆவது பருவமாக ஆக அதிக கோல்களைப் போட்ட விளையாட்டாளர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"எப்போதுமே வெற்றி பெற வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் இவ்வளவு விரைவில் வெற்றி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை"

என்றார் 24 வயது எம்பாப்பே.

அவர் சென்ற காற்பந்துப் பருவத்தின் இறுதியில் PSG அணியுடன் 3 ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அண்மையில் PSG 11ஆவது முறையாக லீக் 1 விருதை வென்றது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்