காற்பந்தில் இனவாதம் - ஆட்டக்காரரைத் தடைசெய்யக் கோரிக்கை
வாசிப்புநேரம் -
உலகின் தலைசிறந்த முன்னணி ஆட்டக்காரர்களின் ஒருவரான விநிசியஸ் ஜூனியர் (Vinicius Jr) இனவாதத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்.
ரியால் மட்ரிட் - பென்ஃபிக்கா ஆட்டத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
ரியாலுக்கு ஆடும் வினிசியஸ் போட்ட கோல் மூலம் அந்த அணி வென்றது.
பென்ஃபிக்காவின் ஜான்லுக்கா பிரஸ்டியானி (Gianluca Prestianni) இனத்தைப் பழிக்கும் சொல்லைப் பயன்படுத்தியதாகச் சில ஆட்டக்காரர்கள் புகார் செய்தனர்.
ஆட்ட விதிமுறைப்படி நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார்.
11 நிமிடத்துக்குப் பிறகு ஆட்டம் தொடர்ந்தது.
சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நடந்த அந்தச் சம்பவம் தற்போது உலகெங்கும் பேசப்படுகிறது.
இனிவரும் சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களிலிருந்து ஜியன்லுக்காவைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.
முன்னணி ரியால் மட்ரிட் வீரர் கிலியான் எம்பாப்பே (Kylian Mbappe) அந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
ஜான்லுக்கா தவறாக எதுவும் சொல்லவில்லை என்று மறுக்கிறார்.
கறுப்பின ஆட்டக்காரர்கள்மீது இனவாதச் சொற்கள் வீசப்படுவதாக அனைத்துலக அரங்கில் தொடர்ந்து புகார் செய்யப்படுகிறது.

ஆதாரம் : Reuters