உலகக் கிண்ணம் 2026 - முதல்முறையாக 48 அணிகள் களமிறங்கும்
வாசிப்புநேரம் -

(படம்: AFP)
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்களுக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி 12 பிரிவுகளுடன் தொடங்கும் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (FIFA) தெரிவித்துள்ளது.
ருவாண்டா தலைநகர் கிகாலியில் நடந்த FIFA சந்திப்புக்குப் பின் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
புதிய மாற்றங்கள்...
⚽ 12 பிரிவுகள்
⚽ ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள்.
⚽ முதல்முறையாக 48 அணிகள் களமிறங்கவுள்ளன. (முன்பு: 32)
⚽ மொத்தம் 104 ஆட்டங்கள் (முன்பு: 64)
⚽ இறுதியாட்டம் : ஜூலை 19, 2026
புதிய அமைப்பின் கீழ், ஒவ்வொரு பிரிவின் சிறந்த 2 அணிகளும் 3ஆம் நிலையில் உள்ள சிறந்த 8 அணிகளும் Knockout சுற்றுக்குத் தகுதி பெறும்.
இறுதியாட்டத்துக்குத் தகுதிபெறும் அணிகளும் 3ஆம் 4ஆம் நிலையில் வரும் அணிகளும் விளையாடும் ஆட்டங்களின் எண்ணிக்கை 7லிருந்து 8ஆக உயரும்.
உலகக் கிண்ணம் 2026 அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.
-AFP