Skip to main content
இந்தியா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தைக் காண கடும் போட்டி

வாசிப்புநேரம் -
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தைக் காண கடும் போட்டி
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Nov 2026 10:48AM புதுப்பிப்பு : 03 Nov 2026 11:47AM

அடுத்த ஆண்டு ஆண்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்கும் ஆட்டத்துக்குச் சுமார் 8.5 மில்லியன் அனுமதிச் சீட்டுக் கேட்டு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

ஆனால் ஆட்டம் நடைபெறும் அரங்கில் 34,000 பேர் மட்டுமே அமரலாம்.

இரு நாடுகளும் குழுப் பிரிவில் மோதவுள்ளன.

அடுத்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி ஆட்டம் தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் (Johannesburg) நகரில் நடைபெறும்

கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டி அடுத்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ளது.

போட்டியில் 14 நாடுகள் மோதும்.

தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே (Zimbabwe), நமீபியா (Namibia) ஆகிய நாடுகள் சேர்ந்து போட்டியை நடத்துகின்றன.

மொத்தம் 120 மில்லியனுக்கும் அதிகமான அனுமதிச்சீட்டுகளுக்கு விண்ணப்பம் வந்திருக்கிறது.

ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்