4 நிமிடங்களில் 2 கோல்கள் - மெஸ்ஸியின் சாதனை
வாசிப்புநேரம் -
காற்பந்துக் களத்தில் மீண்டும் இறங்கிய லயனல் மெஸ்ஸி (Lionel Messi) 4 நிமிடங்களில் 2 கோல்களைப் புகுத்திச் சாதனைப் படைத்துள்ளார்.
மற்றொரு கோல் அடிக்கவும் அவர் துணை புரிந்தார்.
மேஜர் லீக் காற்பந்தில் (Major League Soccer) புதிய சாதனையை அவர் படைத்திருக்கிறார்.
சுமார் 3 மாதங்கள் கழித்து அவர் Inter Miami அணிக்காக சனிக்கிழமை (14 செப்டம்பர்) விளையாடினார் மெஸ்ஸி.
ஜூலை 14ஆம் தேதி அர்ஜென்ட்டினாவுக்காக Copa América போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடியபோது அவரின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
பிறகு, அவர் விளையாடும் முதல் போட்டி இது.
தமக்குச் சோர்வாக இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாகச் சொன்னார் மெஸ்ஸி.

ஆதாரம் : CNN