Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ண வெற்றியாளர் அர்ஜென்டினா, மெஸ்ஸி தலைமையில் ஆஸ்திரேலியாவுடன் நட்புமுறை ஆட்டம்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ண வெற்றியாளர் அர்ஜென்டினா, மெஸ்ஸி தலைமையில் ஆஸ்திரேலியாவுடன் நட்புமுறை ஆட்டம்

(கோப்புப் படம்: REUTERS/Agustin Marcarian)

உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி, லயனல் மெஸ்ஸி தலைமையில் ஆஸ்திரேலியாவுடன் நட்புமுறை ஆட்டத்தில் விளையாடவிருக்கிறது.

ஆட்டம் பெய்ச்சிங்கில் அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெறும்.

பெய்ச்சிங்கின் Workers' விளையாட்டரங்கத்தில் நடைபெறவிருக்கும் ஆட்டம், கத்தார் உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் பங்கெடுத்த பிரிவில் அர்ஜென்டினாவும் ஆஸ்திரேலியாவும் மோதியதைப் பலருக்கு நினைவுபடுத்தும்.

மெஸ்ஸி அதில் இரு கோல்களைப் புகுத்தினார். 2க்கு ஒன்று எனும் கோல் கணக்கில் அர்ஜென்டினா ஆட்டத்தில் வெற்றிபெற்றது.

பெய்ச்சிங்கில் நடைபெறும் நட்புமுறை ஆட்டம் ஆஸ்திரேலியா, சீனா இடையிலான உறவைச் சீராக்க உதவும் என்று ஆஸ்திரேலியக் காற்பந்து அமைப்பு சொன்னது.

சீனாவில் கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபிறகு அண்மைக் காலமாக அனைத்துலக விளையாட்டுகளுக்கு அரங்கங்கள் திறக்கப்படுகின்றன.

அர்ஜென்டினா மற்றொரு நட்புமுறை ஆட்டத்தில் இந்தோனேசிய அணியை ஜக்கர்த்தாவில் சந்திக்கவிருக்கிறது. அது ஜூன் 19ஆம் தேதி நடைபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்