Skip to main content
தந்தை மறைவுக்குப் பிறகு மெஸ்ஸியின் முதல் கோல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

தந்தை மறைவுக்குப் பிறகு மெஸ்ஸியின் முதல் கோல்

வாசிப்புநேரம் -
தந்தை மறைவுக்குப் பிறகு மெஸ்ஸியின் முதல் கோல்

(படம்: Isaiah Vazquez / GETTY IMAGES NORTH AMERICA / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லயனல் மெஸ்ஸி (Lionel Messi) அவரது தந்தையின் இறப்புக்குப் பின் அவரது முதல் கோலைப் புகுத்தியுள்ளார்.

இம்மாதம் 8ஆம் தேதி 68 வயதில் அவரது தந்தை திரு ஹோர்ஹெ மெஸ்ஸி (Jorge Messi) காலமானார்.

அதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற அமெரிக்கக் காற்பந்து லீக் ஆட்டத்தில் இண்டர் மயாமி (Inter Miami) குழுவுக்காக களமிறங்கினார் மெஸ்ஸி.

ஃபிலடெல்ஃபியா யூனியன் (Philadelphia Union) அணிக்கு எதிரான ஆட்டத்தில் 26 நிமிடத்தில் கோல் போட்டு அவரது அணியை முன்னணிக்குக் கொண்டு சென்றார்.

அதுவரை ஆட்டம் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இறுதியில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

தற்போதைய அமெரிக்கக் காற்பந்து லீக் பருவத்தில் இது மெஸ்ஸியின் 13ஆவது கோலாகும்.

"தந்தையின் மறைவுக்குப் பிறகு எப்படி தொடர்ந்து காற்பந்து விளையாடப்போகிறேன்," என்று அவர் முன்னதாகக் கூறியிருந்தார்.

நேற்றைய ஆட்டத்தில் அவர் போட்ட கோல் மீண்டும் அவர் துடிப்புடன் விளையாட உதவும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்