Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்தில் 2 மாதம் கழித்துக் களமிறங்கும் மெஸ்ஸி

வாசிப்புநேரம் -
லயனல் மெஸ்ஸி (Lionel Messi) இரண்டு மாத விடுப்புக்குப் பிறகு தமது Inter Miami அணியுடன் காற்பந்துக் களத்தில் இறங்கவிருப்பதாக அணியின் பயிற்றுவிப்பாளர் ஜெரார்டோ மார்டினோ (Gerardo Martino) கூறியுள்ளார்.

மெஸ்ஸிக்குக் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால்
2 மாத விடுப்பில் இருந்தார்.

தற்போது அவரது உடல்நலம் சீராக உள்ளது என்றும் அண்மையில் அவர் காற்பந்துப் பயிற்சியில் ஈடுபட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஜூலை 14ஆம் தேதி இடம்பெற்ற Copa America போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது மெஸ்ஸியின் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து 8 காற்பந்துப் போட்டிகளில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.

உலகின் மிகச்சிறந்த காற்பந்தாட்டக்காரர் தமது அணிக்குத் திரும்புவதை எண்ணி மகிழ்வதாகக் கூறினார் மார்டினோ.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்