Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

4ஆவது முறையாகத் தங்கக் காலணியை வென்றார் லிவர்ப்பூல் ஆட்டக்காரர் முகமது சாலா

வாசிப்புநேரம் -
4ஆவது முறையாகத் தங்கக் காலணியை வென்றார் லிவர்ப்பூல் ஆட்டக்காரர் முகமது சாலா

(படம்: AFP/Ben Stansall)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

லிவர்ப்பூல் ஆட்டக்காரர் முகமது சாலா (Mohamed Salah) 4ஆவது முறையாகத் தங்கக் காலணியை (Golden Boot) வென்றுள்ளார்.

இங்கிலீஷ் பிரிமியர் லீகின் 2024-2025 காற்பந்துப் பருவத்தில் அவர் மொத்தம் 29 கோல்களை அடித்திருக்கிறார். 18 முறை தமது அணியினர் கோல் போட உதவியிருக்கிறார்.

நியூகாசல் யுனைட்டட் (Newcastle United) அணியின் அலெக்சாண்டர் இசாக் (Alexander Isak) ஆக அதிகமான கோலடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். அவர் அதே பருவத்தில் மொத்தம் 23 கோல்களை அடித்துள்ளார்.

ஒவ்வொரு காற்பந்துப் பருவத்திலும் ஆக அதிகமான கோலடித்த வீரருக்குத் தங்கக் காலணி விருது வழங்கப்படுவது வழக்கம்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்