குழுக்களுக்கு இடையிலான 2025 FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்று... எங்கு?
வாசிப்புநேரம் -
குழுக்களுக்கு இடையிலான 2025 FIFA உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிச்சுற்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெறவுள்ளது.
போட்டியில் உலகம் முழுவதும் உள்ள தலைசிறந்த 32 குழுக்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன.
அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி போட்டிகள் தொடங்கும்.
இறுதிச் சுற்று ஜூலை 13ஆம் தேதி, நியூ ஜெர்சியில் உள்ள METLIFE அரங்கில் நடைபெறும்.
New York Giants, New York Jets ஆகிய இரண்டு குழுக்களின் விளையாட்டரங்கம் அது.
அந்தத் திறந்தவெளி அரங்கம் 2010இல் திறக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் ஏறக்குறைய 82,500 பேர் வரை METLIFE அரங்கத்திற்குள் இருக்க முடியும்.
2026இல் நடைபெறும் நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ணக் காற்பந்தின் இறுதிப்போட்டியும் அந்த அரங்கில் நடைபெறவிருக்கிறது.

ஆதாரம் : Reuters