பிரேசில் காற்பந்து வீரர் நேமார்... சிகிச்சை வெற்றி!

(படம்: Mike Ehrmann/Getty Images/AFP)
பிரேசிலைச் சேர்ந்த 31 வயதுக் காற்பந்து விளையாட்டாளர் நேமாரின் (Neymar) கணுக்காலில் நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
கத்தாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை இடம்பெற்றது.
அவர் இன்று (12 மார்ச்) மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறார்.
எப்போது அவர் மீண்டும் ஆட்டத்துக்குத் திரும்புவார் என்பதை மருத்துவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
ஆனால் வெள்ளிக்கிழமை (10 மார்ச்) மேற்கொண்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
சுமார் 4 மாதங்களுக்கு அவர் ஓய்வெடுப்பார் என்று Paris Saint-Germain காற்பந்துக் குழு தெரிவித்தது.
நேமாரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அது கூறியது.
-AFP