Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணப் போட்டி - பிரேசிலின் அடுத்த ஆட்டத்தில் நெய்மாரைப் பார்க்கமுடியாது

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணப் போட்டி - பிரேசிலின் அடுத்த ஆட்டத்தில் நெய்மாரைப் பார்க்கமுடியாது

Giuseppe CACACE / AFP

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரேசிலின் இரண்டாம் ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் (Neymar) பங்கேற்கமாட்டார்.

வலது கணுக்காலில் காயமுற்றதால் அவரால் சுவிட்ஸர்லந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடமுடியாது என்று அணியின் மருத்துவர் சொன்னார்.

பிரேசிலும் சுவிட்ஸர்லந்தும் பொருதும் ஆட்டம் நாளை மறுநாள் (28 நவம்பர்) நடைபெறும்.

நெய்மாருக்கு அன்றாடம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவரது உடல்நிலை மதிப்பிடப்படும் என்றும் கூறப்பட்டது.

போட்டியின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாடும் அளவிற்கு நெய்மாரை விரைவில் குணப்படுத்துவதுதான் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டது.

செர்பியாவுக்கு எதிரான பிரேசிலின் தொடக்க ஆட்டத்தின்போது நெய்மார் காயமுற்றார்.

அதில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது.

-AP

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்