பெலேயின் சாதனையை முறியடித்த நெய்மார்! - பிரேசிலின் ஆக அதிக கோல்களைப் புகுத்திய ஆட்டக்காரர்

AP Photo
நெய்மார் பிரேசிலின் ஆக அதிக கோல்களைப் போட்ட ஆட்டக்காரர் எனும் சாதனையைப் புரிந்துள்ளார்.
2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் அவர் தமது 78ஆவது கோலைப் புகுத்தினார்.
பொலிவியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான அந்த ஆட்டத்தில் 5க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றது.
31 வயது நெய்மார் அந்த ஆட்டத்தில் 2 கோல்களைப் போட்டார்.
அது அவர் பிரேசிலுக்காக விளையாடும் 125ஆவது ஆட்டம்.
பெலே 92 ஆட்டங்களில் 77 கோல்களைப் புகுத்தியிருந்தார்.
1957ஆம் ஆண்டிலிருந்து 1971ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்.
பெலேக்கு அப்போது வயது 82.
-AFP