Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஜோக்கோவிச் சர்ச்சை: மற்ற டென்னிஸ் வீரர்களின் விசா விண்ணப்பங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா, ஜோக்கோவிச் சர்ச்சையைத் தொடர்ந்து, மற்ற நாடுகளைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்களின் விசா விண்ணப்பங்களையும் விசாரித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
ஜோக்கோவிச் சர்ச்சை: மற்ற டென்னிஸ் வீரர்களின் விசா விண்ணப்பங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

(படம்: AFP/OSCAR DEL POZO)

ஆஸ்திரேலியா, ஜோக்கோவிச் சர்ச்சையைத் தொடர்ந்து, மற்ற நாடுகளைச் சேர்ந்த டென்னிஸ் வீரர்களின் விசா விண்ணப்பங்களையும் விசாரித்து வருகிறது.

டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) ஆஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நுழைவதற்கான தேவைகளைப் பூர்த்திசெய்யாத சிலர் அங்கு இருப்பதால், அவர்களை விசாரிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கேரன் ஆண்ட்ரூஸ் (Karen Andrews) கூறினார்.

ஆனால் எத்தனை வீரர்கள் விசாரிக்கப்படுகின்றனர், அவர்கள் யார் யார் என்ற விவரங்களைத் திரு. ஆண்ட்ரூஸ் வெளியிடவில்லை.

இதற்கிடையே, ஜோக்கோவிச் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பதாகவும் செர்பியா முழுவதும் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிச் (Aleksandar Vucic) கூறியுள்ளார்.

செர்பியா தொடர்பான எந்தவொரு குறிப்பிட்ட நிலைப்பாட்டின் காரணமாகவும் ஜோக்கோவிச்சின் விசா ரத்து செய்யப்படவில்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) தெரிவித்தார்.

ஹோட்டலில் இன்னும் எத்தனை நாளுக்கு ஜோக்கோவிச் தடுத்துவைக்கப்படுவார் என்பது தெரியவில்லை.

அந்த ஹோட்டலின் மோசமான நிலைமையை இதற்கு முன்னர் அகதிகள் பல முறை குறைகூறியுள்ளனர்.

ஜோக்கோவிச்சை நல்ல ஹோட்டலுக்கு மாற்றவேண்டும் என்றும் செர்பியா ஆஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்