ஆஸ்திரேலியா செல்வதற்குமுன் டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச் எங்கிருந்தார்? அதுபற்றி அவர் சரியான தகவல் அளித்தாரா?
(படம்: AFP)
பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகருக்குச் செல்வதற்கு 2 வாரங்களுக்குமுன் செர்பியா, ஸ்பெயின் ஆகியவற்றில்தான் இருந்தார் எனப் பயணப் படிவத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் அந்தக் காலக் கட்டத்தில் பெல்கிரேடிலிருந்து (Belgrade) ஸ்பெயினுக்குச் சென்று, பின் ஆஸ்திரேலியா சென்றதாக இருவர் தகவல் அளித்துள்ளனர்.
சமூக ஊடகத் தளங்களிலும் அவர் ஆஸ்திரேலியா செல்வதற்குமுன் இரண்டுவார காலத்தில் பெல்கிரேடில் இருந்த படங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியக் குடிநுழைவுப் பிரிவினருக்குப் பொய்த் தகவல் வழங்குவது சட்டப்படிக் குற்றமாகக் கருதப்படும். அவ்வாறு செய்யப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு 12 மாதம் வரை சிறைத் தண்டனையும் 4,730 டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
அவ்வாறு செய்வோரின் விசாவும் ரத்துசெய்யப்படலாம்.