Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

"2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய, பெலருஸ் அணிகள் பங்கெடுக்க அனுமதிக்கக்கூடாது"

வாசிப்புநேரம் -
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய, பெலருஸ் அணிகள் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒலிம்பிக் வீரர்கள் 42 பேர் அவ்வாறு அழைப்பு விடுத்தனர். உக்ரேனிலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினர்.

இல்லாவிட்டால் ரஷ்ய, பெலருஸ் அணிகள், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்குரிய ஆதரவை மீட்டுக்கொள்ளுமாறு கனடிய ஒலிம்பிக் மன்றத்தை வீரர்கள் கேட்டுக்கொண்டனர்.

கொடிகளும் தேசிய கீதமும் இல்லாமல் அந்த இரண்டு அணிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்கலாம் என அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் ஜனவரியில் அறிவித்தது.

உலகின் பல நாடுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஒலிம்பிக்கைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவை மிரட்டல் விடுத்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்