Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ 2020: ஆக அதிகமான தங்கப் பதக்கங்களை வென்றது அமெரிக்கா

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

வாசிப்புநேரம் -

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

அமெரிக்கா, ஆக அதிகமாக 39 தங்கப் பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

அதற்கு அடுத்த நிலையில், 38 தங்கப் பதக்கங்களுடன் சீனா உள்ளது.

போட்டிகளின் இறுதித் தங்கப் பதக்கத்தை ஆண்கள் நீர்ப்பந்து இறுதிப் போட்டியில் (Water Polo) செர்பியா வென்றது.

16 நாள்கள் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், மொத்தம் 33 விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தன.

கிருமிப்பரவல் அச்சத்தால், தோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஜப்பானியர்களிடையே ஆதரவு சற்று குறைவாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஜப்பான், இதுவரை இல்லாத அளவு, ஒலிம்பிக் போட்டிகளில் 27 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

பதக்கப் பட்டியலில், அது 3ஆவது நிலையில் உள்ளது.

22 தங்கப் பதக்கங்களுடன் பிரிட்டன் 4ஆவது இடத்திலும், 20 தங்கப் பதக்கங்களுடன் ரஷ்ய ஒலிம்பிக் குழு 5ஆவது இடத்திலும் உள்ளன.

அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் 2024ஆம் ஆண்டில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும்.

அதற்கிடையில், சுமார் 6 மாதங்களில், பெய்ச்சிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்