Skip to main content
"ஓய்வு பெறுகிறேன்!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

"ஓய்வு பெறுகிறேன்!" - விரக்தியுடன் கூறிய இந்திய வீராங்கனை விநேஷ் போகாட்

வாசிப்புநேரம் -
"ஓய்வு பெறுகிறேன்!" - விரக்தியுடன் கூறிய இந்திய வீராங்கனை விநேஷ் போகாட்

(படம்: REUTERS/Arlette Bashizi)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 08 Aug 2024 11:00AM புதுப்பிப்பு : 08 Aug 2024 11:20AM
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட இந்திய வீராங்கனை விநேஷ் போகாட் (Vinesh Phogat) விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் 'X' தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

"மல்யுத்தம் என்னை வென்றது..நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவு, எனது துணிவு நொறுங்கிவிட்டது. எனக்கு இனி சக்தி இல்லை. மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன், என்னை மன்னிக்கவும்," என்றார் விநேஷ்.

50 கிலோகிராம் எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் போட்டியிடவிருந்த விநேஷ் 50 கிலோ எடையை மிஞ்சியதால் அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமை விநேஷ் போகாட்டைச் சேரும்.

அவர் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட செய்தி வெளியானதும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலர் சமூக ஊடகத் தளங்களில் விநேஷுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்