Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் - போட்டியில் நீடிக்கும் சிங்கப்பூரின் kitefoiling, படகோட்ட, கோல்ஃப் வீரர்கள்

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் - போட்டியில் நீடிக்கும் சிங்கப்பூரின் kitefoiling, படகோட்ட, கோல்ஃப் வீரர்கள்

(படம்: AP/Jacquelyn Martin)

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூர் வீரர் மெக்சிமிலியன் மேடெர் (Maximilian Maeder), kitefoiling எனும் நீர்சாகச விளையாட்டின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்.

தொடக்கச் சுற்றுகளில் அவர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) இரண்டாவதாக முடித்தார்.

இறுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது.

மோசமான வானிலை காரணமாக நேற்று (7 ஆகஸ்ட்) போட்டிகள் நடைபெறவில்லை.

Kayak படகோட்டத்தில் பெண்கள் K1 500 மீட்டர் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குச் சிங்கப்பூரின் ஸ்டெஃபனி சென் (Stephenie Chen) முன்னேறியிருக்கிறார்.

அரையிறுதிப் போட்டி நாளை மறுநாள் (10 ஆகஸ்ட்) நடைபெறும்.

மகளிர் கோல்ஃப் (Golf) விளையாட்டில் சிங்கப்பூரின் ஷேனன் டான் சுவான் யின் (Shannon Tan Xuan Yin) இன்று இரண்டாம் சுற்றில் போட்டியிடுவார்.

முதல் சுற்றின் இறுதியில் அவர் 60 பேரில் 50ஆம் இடத்தில் வந்தார்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்