Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலக நீர் விளையாட்டுப் போட்டி: 3 கிலோமீட்டர் விரைவு நீச்சல் பிரிவில் சிங்கப்பூர் தோல்வி

வாசிப்புநேரம் -
உலக நீர் விளையாட்டுப் போட்டிகளின் 3 கிலோமீட்டர் விரைவு நீச்சல் பிரிவில் சிங்கப்பூர் அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.

அந்தப் பிரிவில் ஜப்பான் அதன் முதல் உலக விருதை வென்றது.

நீர் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக 3 கிலோமீட்டர் விரைவு நீச்சல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

தகுதிச்சுற்றில் வெற்றிபெறாத நீச்சல் வீரர்கள் பிரிவிலிருந்து நீக்கப்படுகின்றனர்.

தகுதிச்சுற்றில் 1500 மீட்டர், அரையிறுதிச் சுற்றில் 1000 மீட்டர், பின்னர் 500 மீட்டருக்கு விரைவாக நீச்சல் அடிப்பது என அது 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

அடுத்த சுற்றுக்கு முதல் 10 நீச்சல் வீரர்கள் மட்டுமே முன்னேறினர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த சான்டல் லியூவ் (Chantal Liew) 57 வீரர்களில் 31ஆவது நிலையில் வந்தார்.

அவரது சக அணி உறுப்பினர் கேட் ஓனா (Kate Ona) 46ஆவது நிலையில் வந்தார்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்