Skip to main content
காமன்வெல்த் போட்டி: சிங்கப்பூருக்கு நீச்சலில் வெள்ளி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

காமன்வெல்த் போட்டி: சிங்கப்பூருக்கு நீச்சலில் வெள்ளி

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் போட்டி: சிங்கப்பூருக்கு நீச்சலில் வெள்ளி

படம்: TeamSG/Lim Wenxiang

வெளியீடு : 30 Jul 2026 09:35AM புதுப்பிப்பு : 30 Jul 2026 11:14AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரின் நீச்சல் வீரர் டோ வெய் சூங் (Toh Wei Soong) காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

உடற்குறையுள்ளோருக்கான பிரிவின் கீழ் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் அவர் பங்கேற்றார்.

பதக்கத்தைக் கைப்பற்ற டோ எடுத்துக்கொண்ட நேரம் 29.36 விநாடிகள்.

தென்னாப்பிரிக்காவின் கிறிஸ்டியன் சாடி (Christian Sadie) தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதற்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் 28.06 விநாடிகள்.

டோ இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வென்றார்.

2018ஆம் ஆண்டு அவர் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

2022ஆம் ஆண்டு அவர் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

இந்த காமன்வெல்த் போட்டியில் சிங்கப்பூருக்கு இதுவரை இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

முன்னதாக, மகளிர் சீருடற் பயிற்சிப் பிரிவில் சிங்கப்பூரின் அமண்டா யாப் (Amanda Yap) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்