"பதக்கம் பெண்களின் கனவு" - உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆப்கான் அகதி
பதக்கத்தை வெல்வது "ஓரு பெண்ணின் கனவு" என்று ஆப்கானின் அகதிகள் குழுவைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஸாக்கியா குடாடாடி (Zakia Khudadadi) பாரிஸ் உடற்குறையுள்ளோர் தேக்குவாண்டோ (Taekwondo) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
"அகதிகள் நம்பிக்கை, சுதந்திரம், அமைதி ஆகியவற்றைப் பின்பற்ற" தம்முடைய வெற்றி ஊக்கமளிக்கும் என்று அவர் சொன்னார்.
உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டிகளில் அகதிகள் குழு சார்பில் பதக்கம் வென்ற முதல் விளையாட்டாளர் ஸாக்கியா.
3 ஆண்டுகளுக்கு முன் தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஸாக்கியா தம்முடைய நாட்டைப் பிரதிநித்தார்.
அப்போது ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
போட்டிகளுக்குச் சில நாள்களுக்கு முன் விளையாட்டாளர்கள் பாதுகாப்பாக ஆப்கானிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தலிபான், பெண்களின் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
"இப்போது தலிபான் ஆட்சி என்னுடைய நாட்டில் இருப்பதால் பெண்கள் பல சிரமங்களை எதிர்நோக்குக்கின்றனர். ஆனால் இந்தப் பதக்கம் பெண்கள் தொடர்ந்து தலிபானுடன் போராட ஊக்குவிக்கும்," என்று ஸாக்கியா BBC-யிடம் குறிப்பிட்டார்.