Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆண்களுக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முதல்முறையாகப் பெண் நடுவர்கள்

வாசிப்புநேரம் -

கத்தாரில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஆண்களுக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முதல்முறையாகப் பெண் நடுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 36 நடுவர்கள். அவர்களில் மூவர் பெண்கள்.

அவர்கள் பிரான்ஸ், ருவாண்டா, ஜப்பான் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். 

FIFA உலகக் கிண்ணப் போட்டியின் வரலாற்றில் முதல்முறையாகப் பெண் நடுவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக FIFA நடுவர் குழுவின் தலைவர் பியர்லூய்கி கொலினா (Pierluigi Collina) கூறினார்.

எதிர்காலத்தில் ஆண்களுக்கான போட்டிகளுக்குப் பெண் நடுவர்களைத் தெரிவுசெய்வது இயல்பான ஒன்றாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்