Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாகத் தொடங்கும்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாகத் தொடங்கும்

(படம்: MUSTAFA ABUMUNES / AFP)

கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாகத் தொடங்கும் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன்படி வரும் நவம்பர் 20ஆம் தேதி போட்டி தொடங்கும்.

போட்டியின் தொடக்க நிகழ்ச்சியையும் போட்டியை ஏற்றுநடத்தும் நாட்டின் முதல் ஆட்டத்தையும் ஒரே நாளில் நடத்தச் சம்மேளனம் ஒருமனதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தேதி மாற்றப்பட்டது.

போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாகத் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதில் போட்டியை ஏற்றுநடத்தும் நாடு பங்குபெறும்.

இதற்கு முன்னர் நவம்பர் 21ஆம் தேதியன்று தொடக்க நிகழ்ச்சிக்குப் பிறகு கத்தாரும் ஈக்குவடோரும் மோதவிருந்தன.

ஆனால் அதற்கு முன்னர் வேறு இரு ஆட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.

தேதி மாற்றத்தால் உலகக் கிண்ணப் போட்டி 29 நாள்கள் நீடித்து டிசம்பர் 18ஆம் தேதி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்