காமன்வெல்த் விளையாட்டுகள் - சிங்கப்பூரின் பேட்மிண்டன் விளையாட்டாளர்கள் அடுத்த சுற்றுக்குச் செல்கின்றனர்

(படம்: Facebook/Singapore Badminton Association)
காமன்வெல்த் விளையாட்டுகளின் பேட்மிண்டன் போட்டியில் சிங்கப்பூரின் முன்னணி ஒற்றையர் பிரிவு ஆட்டக்காரர்கள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூர் லோ கியென் இயூ (Loh Kean Yew) மூன்று செட்களில் மொரிஷியஸ் ஆட்டக்காரரைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்று (6 ஆகஸ்ட்) காலிறுதி ஆட்டத்தில் அவர் மலேசியாவின் இங் ஸி யோங்கைச் (Ng Tze Yong)சந்திப்பார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிங்கப்பூரின் யோ சியா மின் (Yeo Jia Min) இரண்டே செட்களில் இங்கிலாந்து ஆட்டக்காரரைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறார்.
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 போட்டிகளை meWATCH தளத்தில் நேரடியாகக் காணலாம். www.mewatch.sg/cwg2022 எனும் தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்!
பார்க்கத் தவறிய விளையாட்டுகளின் முக்கியத் தருணங்களை YouTube தளத்தின் Mediacorp Entertainment வழி கண்டுரசிக்கலாம்!