Skip to main content
டென்னிஸ் ஆட்டத்தில் இல்லை, வருத்தமும் இல்லை: நடால்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

டென்னிஸ் ஆட்டத்தில் இல்லை, வருத்தமும் இல்லை: நடால்

வாசிப்புநேரம் -
பிரபல டென்னிஸ் வீரர் ரஃபாயல் நடால் (Rafael Nadal) டென்னிஸ் விளையாடாமல் இருப்பதில் வருத்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த 38 வயது நடால் சென்ற ஆண்டு (2024) நவம்பர் மாதம் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.

தாம் டென்னிஸிலிருந்து மகிழ்ச்சியுடன் விலகியதாக நடால் குறிப்பிட்டார்.

தமக்கு டென்னிஸ் மீது மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் முடிந்திருந்தால் தொடர்ந்து விளையாடிருப்பார் என்றும் அவர் சொன்னார்.

உடல்ரீதியாக அதைத் தொடர முடியவில்லை என்றார் அவர்.

Laureus உலக விளையாட்டு விருதுகளில் அவருக்கு Sporting Icon விருது வழங்கப்பட்டது.

அப்போது அவர் அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

டென்னிஸ் போட்டிகளில் ஈடுபட்டபோது நடால் பல்வேறு காயங்களுக்கு ஆளானார்.

போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதை முடிந்தவரை ஒத்திவைத்ததாக அவர் பகிர்ந்தார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்