Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலக ரபாயல் நடால் திட்டம்

வாசிப்புநேரம் -
டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலக ரபாயல் நடால் திட்டம்

(படம்: Instagram/Rafa Nadal Academy)

பிரபல டென்னிஸ் வீரர் ரபாயல் நடால் (Rafael Nadal) பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறவும் திட்டமிட்டுள்ளார்.

இடுப்புப் பகுதிக் காயத்தால் அவதியுறும் நடால் தமது 19 ஆண்டுகளில் முதன்முறையாகப் பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியில் விளையாடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளார்.

அந்தப் போட்டியில் நடால் இதுவரை 14 முறை ஆடவர் ஒற்றையர் பிரிவில் விருது வென்றுள்ளதாக BBC செய்தி கூறுகிறது.

அடுத்த ஆண்டு (2024) டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறவும் தமக்குத் திட்டமிருப்பதாக இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள 36 வயது நடால் தெரிவித்தார்.

"இது எனது முடிவல்ல, என் உடல் எடுத்துள்ள முடிவு. பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியில் விளையாடுவது கடினம்" என நடால் BBCயிடம் கூறினார்.

'King of Clay' எனும் 'களிமண்தரையின் மன்னன்' என்று அழைக்கப்படும் நடால் பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டியில் இதுவரை 115 ஆட்டங்களில் 112ஐ வென்றுள்ளார்.

எனினும் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியின்போது இடுப்புப் பகுதியில் காயமடைந்ததில் இருந்து அவர் விளையாடுவதில்லை.

பிரெஞ்சுப் பொது விருதுப் போட்டி இம்மாதம் 28ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை பாரிஸில் நடைபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்