Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஓய்வுபெறுகிறார் டென்னிஸ் வீரர் ரஃபாயல் நடால்

வாசிப்புநேரம் -
டென்னிஸ் வீரர் ரஃபாயல் நடால் (Rafa Nadal) டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

அவருக்கு வயது 38.

ஸ்பெயினைச் சேர்ந்த அவர் டேவிஸ் கிண்ண (Davis Cup) இறுதிச்சுற்றுக்குப் பின்னர் ஓய்வுபெறுவார்.

கடந்த சில ஆண்டுகள், குறிப்பாகக் கடைசி இரண்டு ஆண்டுகள் சிரமமானவையாய் அமைந்ததாக நடால் கூறினார்.

ஓய்வுபெற எடுத்த முடிவு கடினமான ஒன்று என அவர் காணொளியில் பகிர்ந்தார்.

ஆனால் வாழ்க்கையில் அனைத்துக்கும் தொடக்கமும் முடிவும் இருப்பதை அவர் சுட்டினார்.

நடால் 22 முறை கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் விருதுகளை வென்றிருக்கிறார்.

அவர் 14 முறை பிரெஞ்சு பொதுவிருதுப் போட்டியை வென்று சாதனை படைத்திருக்கிறார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்