Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Champions League பட்டத்தை வென்ற Real Madrid அணி

வாசிப்புநேரம் -

ஸ்பானிய காற்பந்துக் குழுவான ரியால் மாட்ரீட் (Real Madrid) 14-ஆவது முறையாக Champions League பட்டத்தை வென்றுள்ளது. 

இன்று (29 மே) காலை நடைபெற்ற ஆட்டத்தில் அது ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கோல்கணக்கில் லிவர்பூல் (Liverpool) குழுவைத் தோற்கடித்தது. 

பாரிஸ் அரங்கில் விளையாட்டு சுமார் நாற்பது நிமிடம் தாமதமாகத் தொடங்கியது. 

போலி நுழைவுச் சீட்டுகளே அதற்குக் காரணம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர். 

அதனால் ரசிகர்கள் தடையை மீறி அரங்கிற்குள் செல்ல  முயன்றனர். 

அரங்கத்துக்கு வெளியே லிவர்புல் ரசிகர்கள் காவல்துறையினருடன் மோதினர். 

நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்களைக் காவல்துறை கண்ணீர்ப்புகையைப் பயன்படுத்திக் கலைத்தது. 

ஆட்டத்தை லிவர்பூல் குழு ஆக்கிரமித்தபோதும் ரியால் மாட்ரீட் கோல்காவலர் திபூட் கூட்டுவா(Thibaut Courtois)  பல கோல் முயற்சிகளைத் தடுத்துவிட்டார். 

ஆட்டத்தின் ஒரே கோலை பிரேசில் ஆட்டக்காரர் வனிக்கீயஸ் ஜூனியர் (Vinicius Junior) போட்டு, ரியால் மாட்ரீட்டுக்கு மேலும் ஒரு பட்டத்தைக் கொடுத்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்