Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

"ஆப்கான் பெண்களை விடுவியுங்கள்" சட்டையை அணிந்த பெண் ஒலிம்பிக்கிலிருந்து நீக்கம்

வாசிப்புநேரம் -
"ஆப்கான் பெண்களை விடுவியுங்கள்" சட்டையை அணிந்த பெண் ஒலிம்பிக்கிலிருந்து நீக்கம்

(படம்: AP Photo/Abbie Parr)

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த B-Girl எனும் மனிஷா தலாஷ் (Manizha Talash) ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சட்டையில் "ஆப்கன் பெண்களை விடுவியுங்கள்" என்ற வாசகம் இருந்ததால் அவர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்ததாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகம் கண்டுள்ள Breakdance எனும் நடன விளையாட்டில் அகதிகள் அணி சார்பாகத் தலாஷ் போட்டியிடவிருந்தார்.

போட்டியில் அவர் தோல்வியுற்றார். பிறகு அவர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஒலிம்பிக் போட்டிகளில் அரசியல் முழக்கவரிகள் அல்லது வாசகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

காபூலிலிருந்து வந்த தலாஷ் ஸ்பெயினில் வசிக்கிறார்.

தலாஷ் உட்பட மொத்தம் 37 பேர் அகதிகள் அணி சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிடுகின்றனர்.

2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு அதிகாரத்தைக் கைபற்றியவுடன் தலாஷ் அங்கிருந்து தப்பினார்.

அப்போது பெண்கள் வகுப்புகளுக்குச் செல்வதற்கும் உடற்பயிற்சிக்கூடங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்