Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

'எனக்கு 41 வயதாகிவிட்டது' - டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் ஓய்வுபெறுகிறார்

வாசிப்புநேரம் -

டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் (Roger Federer) ஓய்வுபெறவிருப்பதாக அறிவித்துள்ளார்.

அவருக்கு வயது 41.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் Laver Cup போட்டியே தாம் பங்கேற்கவுள்ள இறுதிப் போட்டி என்று அவர் சொன்னார்.

"கடந்த மூவாண்டுகளில் காயங்கள், அறுவைச் சிகிச்சைகள் என்று பல்வேறு விதமான சவால்களை எதிர்நோக்கினேன்,"

"மீண்டும் சிறப்பான நிலைக்குத் திரும்ப நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் எனது உடலின் எல்லைகளையும் ஆற்றல்களையும் அறிவேன். அது அண்மையில் என்னிடம் கூறுவதெல்லாம் இதுதான், 'அன்பே எனக்கு 41 வயதாகிவிட்டது'..." என்று ஃபெடரர் Instagramஇல் பதிவிட்டார்.

கடந்த 24 ஆண்டுகளில் 1,500க்கும் அதிகமான ஆட்டங்களில் விளையாடியுள்ளதைக் குறிப்பிட்ட அவர், தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் பங்கெடுப்பதை நிறுத்துவதற்கு இதுதான் நேரம் என்பதை உணர்ந்துகொண்டுள்ளதாகச் சொன்னார்.

இருப்பினும் மற்ற வகைகளில் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தப்போவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

ரோஜர் ஃபெடரர் 20 Grand Slam பட்டங்களைப் பெற்றுள்ளார்.

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்