Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

போர்ச்சுகலின் இளையர் அணியில் விளையாடவிருக்கிறார் ரொனால்டோவின் மகன்

வாசிப்புநேரம் -
போர்ச்சுகலின் இளையர் அணியில் விளையாடவிருக்கிறார் ரொனால்டோவின் மகன்

(கோப்புப் படம்: REUTERS/Yazeed Aldhawaihi)

காற்பந்துப் பிரபலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் (Cristiano Ronaldo) மூத்த மகன் போர்ச்சுகலின் (Portugal) 15 வயதுக்குட்பட்ட இளையர் அணியில் சேரவிருக்கிறார்.

14 வயது கிறிஸ்டியானோ Jr இம்மாதம் குரோஷியாவில் (Croatia) நடைபெறும் போட்டியில் போர்சசுகல் அணிக்காகக் களமிறங்கவிருக்கிறார். அது அவரது முதல் அனைத்துலகக் காற்பந்து போட்டியாக அமையும். ஜப்பான், கிரீஸ், இங்கிலாந்துடன் போர்ச்சுகல் பொருதவுள்ளது.

கிறிஸ்டியானோ Jr தற்போது சவுதி அரேபியாவில் உள்ள Al-Nassr கழகத்தில் காற்பந்துப் பயிற்சி பெற்று வருகிறார்.

மகன் தமக்குப் பெருமையளித்திருப்பதாக ரொனால்டோ அவரது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

கிறிஸ்டியானோ Jr தமது தந்தையைப் போல காற்பந்தில் சிறந்து விளங்குவதாகக் கூறப்படுகிறது.

தம்முடன் காற்பந்து விளையாடுவதே மகனின் கனவு என்று ரொனால்டோ 2022ஆம் ஆண்டில் கூறியிருந்தார்.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்