Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கிறிஸ்டியானோ ரொனால்டோவா லயனல் மெஸ்ஸியா? "இனி இந்தக் கேள்விக்கு இடமில்லை"

வாசிப்புநேரம் -

கிறிஸ்டியானோ ரொனால்டோவா லயனல் மெஸ்ஸியா? 

காற்பந்து ரசிகர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுவரும் கேள்வி இது. சிலர் 2 ஆட்டக்காரர்களுமே சிறந்தவர்கள் என்று கூறுவார்கள்.

இன்னும் சிலர் தங்களுக்கு இருவரில் ஒருவரைத்தான் பிடிக்கும் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலகியதில்லை.

இந்நிலையில் தாம் இனி மெஸ்ஸியின் "பரம வைரி" அல்ல என்று கூறியுள்ளார் ரொனால்டோ. 

"கிறிஸ்டியானோ ரொனால்டோவை விரும்புவோர் மெஸ்ஸியை வெறுக்க வேண்டியதில்லை. இருவரும் சிறந்தவர்கள். காற்பந்து வரலாற்றை மாற்ற இருவரும் பங்காற்றியுள்ளனர்" என்று 38 வயது ரொனால்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்குமுன்னர் ஸ்பெயினில் வெவ்வேறு அணிகளுக்கு விளையாடிய ரொனால்டோவும் மெஸ்ஸியும் இன்றுவரை உச்ச நட்சத்திரங்களாகக் கருதப்படுகின்றனர்.

ரியால் மட்ரிட் (Real Madrid) முன்னாள் ஆட்டக்காரரான ரொனால்டோ தற்போது சவுதி அரேபிய அணியான  Al-Nassrஇல் விளையாடுகிறார். 

பார்சலோனா (Barcelona) முன்னாள் ஆட்டக்காரரான மெஸ்ஸி அமெரிக்காவின் Inter Miami அணியில் இருக்கிறார். 

ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்