Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் இன்னொரு டென்னிஸ் வீரரின் விசா ரத்து

ஆஸ்திரேலியாவில் நோவாக் ஜோக்கோவிச் விசா சர்ச்சையைத் தொடர்ந்து, இன்னொரு டென்னிஸ் வீரரான ரெனாட்டா வோராக்கோவாவின் (Renata Voracova) விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில் நோவாக் ஜோக்கோவிச் விசா சர்ச்சையைத் தொடர்ந்து, இன்னொரு டென்னிஸ் வீரரான ரெனாட்டா வோராக்கோவாவின் (Renata Voracova) விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

செக் நாட்டைச் சேர்ந்த அவர் ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ள அங்குச் சென்றிருந்தார்.

வோராக்கோவா, தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து சரியான காரணத்துக்கு விலக்குப் பெற்றவர் என்று செக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவருக்கு அண்மையில் தான் COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டதாக அது விளக்கியது.

இருப்பினும் அண்மையில் நோய்த்தொற்று ஏற்பட்டவரும் கூட, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டி இம்மாதம் 17ஆம் தேதியன்று மெல்பர்னில் தொடங்கவுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்