Skip to main content
மீண்டும் டென்னிஸ் போட்டியில் களமிறங்கும் செரினா வில்லியம்ஸ்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

மீண்டும் டென்னிஸ் போட்டியில் களமிறங்கும் செரினா வில்லியம்ஸ்

வாசிப்புநேரம் -
மீண்டும் டென்னிஸ் போட்டியில் களமிறங்கும் செரினா வில்லியம்ஸ்

(கோப்புப் படம்: ANGELA WEISS / AFP)

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் (Serena Williams) மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நடைபெறும் Queen's Club இரட்டையர் மகளிர் போட்டியில் விளையாடப் போவதாக அவர் தெரிவித்தார்.

44 வயது வில்லியம்ஸ் கடைசியாக 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்கப் பொதுவிருதுப் போட்டியில் பங்கெடுத்தார்.

டென்னிஸ் விளையாட்டிலிருந்து தாம் ஓய்வு பெறவில்லை என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

மாறாக, டென்னிஸைவிட்டு மற்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மை மாதங்களில் அவர் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதாக வதந்திகள் பரவின.

வில்லியம்ஸ் பெயர்பெற்ற டென்னிஸ் விளையாட்டாளர்.

உலகிலேயே ஆக அதிக சம்பளம் பெற்ற பெண் விளையாட்டு வீரர் அவர் என்று நம்பப்படுகிறது.

அவர் பரிசுப் பணமாகக் கிட்டத்தட்ட 95 மில்லியன் டாலர் பெற்றிருக்கிறார்.

அமெரிக்கரான வில்லியம்ஸ் 2023ஆம் ஆண்டு 2ஆவது பிள்ளையைப் பெற்றெடுத்தபின் டென்னிஸ் பக்கம் அதிகம் வரவில்லை.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்