Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

'வருக வருக..ஓய்வுக்காலத்துக்கு வருக' - ரோஜர் ஃபெடரரை வரவேற்ற செரினா வில்லியம்ஸ்

வாசிப்புநேரம் -

டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறும் 41 வயது ரோஜர் ஃபெடரரின் (Roger Federer) முடிவை டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் (Serena Williams) வரவேற்றுள்ளார்.

20 முறை Grand Slam பட்டத்தை வென்ற ஃபெடரர், அடுத்த வாரம் லண்டனில் நடைபெறும் Laver Cup போட்டியில் விளையாடிய பிறகு ஓய்வுபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

விளையாட்டிலிருந்து ஓய்வுபெறப்போவதாக ஏற்கெனவே கூறியிருந்த செரினா வில்லியம்ஸ் Instagramஇல் அது குறித்துக் கருத்துரைத்தார்.

"நான் எப்போதுமே உங்களின் ரசிகை.நம் இருவருடைய விளையாட்டுப் பயணங்களிலும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. நீங்கள், என்னையும் சேர்த்து மில்லியன் கணக்கானோருக்கு முன்மாதிரியாக இருந்துள்ளீர்கள். நாங்கள் உங்களை என்றுமே மறக்கமாட்டோம்"

என்று அவர் சொன்னார்.

23 முறை Grand Slam பட்டத்தை வென்ற செரினா கடந்த வாரம் நடந்த அமெரிக்கப் பொது விருதுப் போட்டியில் கலந்துகொண்டார்.

அதுவே அவரது இறுதி போட்டி என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்