திடலுக்குள் பொருள்களை வீசிய ரசிகர்கள் - செவில்லா அணிக்கு அபராதம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஸ்பெயினில் ஒரு காற்பந்து ஆட்டத்தின்போது ரசிகர்கள் திடலுக்குள் பொருள்களை வீசியுள்ளனர்.
அதனால் அடுத்த 3 ஆட்டங்களுக்கு அந்த அரங்கத்தின் ஒரு பகுதி மூடப்படும் என்று ஸ்பெயினின் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
செவில்லா (Sevilla) நகரில் உள்ள ரேமன் சான்ச்செஸ் -பிஸ்ஜுவான் (Ramon Sanchez-Pizjuan) அரங்கில் லாலிகா (LaLiga) ஆட்டத்தின்போது அந்தச் சம்பவம் நடந்தது.
ரியால் பெட்டிஸ் (Real Betis) அணி 2 - 0 எனும் கோல் கணக்கில் செவில்லா அணியை வென்றது.
ஆட்டத்தின்போது அதிருப்தி அடைந்த செவில்லா ரசிகர்கள் திடலுக்குள் பொருள்களை வீசினர்.
ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமானது. ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு விளையாட்டாளர்கள் திடலிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
செவில்லா அணிக்கு சுமார் 52,400 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அணி தெரிவித்தது.
லாலிகா பட்டியலில் செவில்லா தற்போது 13ஆவது இடத்திலும் ரியால் பெட்டிஸ் 5ஆவது இடத்திலும் உள்ளன.

ஆதாரம் : Reuters