Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

நூறு மீட்டர் - 11.46 விநாடி... மீண்டும் தேசியச் சாதனை படைத்துள்ளார் சாந்தி பெரேரா

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மீண்டும் தேசியச் சாதனை படைத்திருக்கிறார்.

அவர் நியூஸிலந்து திடல்தடப் போட்டிகளில் அந்தச் சாதனையைப் படைத்தார்.

பெரேரா 7 மாதத்துக்கு முன்புதான் 100 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் தேசியச் சாதனை படைத்தார்.

இதில் அதிசயம் என்னவென்றால் சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் இடம்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுகளில் பெரேரா கடைசியாகப் போட்டியிட்டார்.

26 வயது பெரேரா பயிற்சிப் போட்டியில் 100 மீட்டரை 11.46 விநாடிகளில் ஓடிமுடித்தார். அவரது முன்னையச் சாதனையை அவர் 0.02 விநாடி குறைவாக முடித்து சாதனைபடைத்தார்.

இறுதிப்போட்டியில் அவர் 11.44 விநாடியில் நூறு மீட்டரை ஓடிமுடித்தார். ஆனால் விநாடிக்கு 3.4 மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் அது தேசியச் சாதனையாகக் கருதப்படவில்லை.

விநாடிக்கு 2 மீட்டர் வேகத்தைவிட அதிகளவில் காற்று வீசும்போது போட்டி முடிவுகள் கருத்திற்கொள்ளப்படுவதில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்