காமன்வெல்த் விளையாட்டுகள் - சிங்கப்பூரின் சாந்தி பெரேரா 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை

(படம்: Andy Chua/Commonwealth Games Singapore)
சிங்கப்பூரின் ஓட்டப்பந்தய வீராங்கனை சாந்தி பெரேரா, காமன்வெல்த் விளையாட்டுகளில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.
அவர் அரையிறுதிச் சுற்றை 23.46 விநாடிகளில் முடித்து
5-ஆம் இடத்தில் வந்தார்.
பெரேரா ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றை முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட நேரமும் 23.46 விநாடிகள்தான்.
அவர் அப்போது தேசியச் சாதனை படைத்தார்.
பெரேரா இவ்வாண்டுத் தொடக்கத்தில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23.52 விநாடிகள்.
பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் 2022 போட்டிகளை meWATCH தளத்தில் நேரடியாகக் காணலாம். www.mewatch.sg/cwg2022 எனும் தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்!
பார்க்கத் தவறிய விளையாட்டுகளின் முக்கியத் தருணங்களை YouTube தளத்தின் Mediacorp Entertainment வழி கண்டுரசிக்கலாம்!