ஜப்பான் பொதுவிருதுப் போட்டியின் வெற்றியாளர் பி.வி. சிந்து
வாசிப்புநேரம் -
படம்: Yuichi YAMAZAKI / AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஜப்பானில் நடந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
ஜப்பான் பொதுவிருதுப் போட்டியில் அவர் பட்டம் வெல்வது இது முதல் முறை.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.
தோக்கியோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை (Akane Yamaguchi) 21-17, 21-17 என்ற செட் கணக்கில் சிந்து வீழ்த்தினார்.
2024ஆம் ஆண்டு சையத் மோடி இந்தியா அனைத்துலகப் போட்டிக்குப் பிறகு சிந்து வெல்லும் முதல் பட்டமும் இதுவே.
அடுத்த மாதம் புதுடில்லியில் நடைபெறவுள்ள உலக பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என்று சிந்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பொதுவிருது வெற்றி தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
"இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது நல்லதுதான். ஆனால் வெற்றிபெற்றுப் பட்டத்தை வெல்வது முற்றிலும் வேறுபட்டது. இந்த வெற்றி எனக்கு அதிக தன்னம்பிக்கையைத் தந்துள்ளது," என்றார் சிந்து.

ஆதாரம் : AFP