தென்கிழக்காசிய விளையாட்டுகள் - காற்பந்தில் பதக்கம் வெல்ல இன்னும் சிங்கப்பூருக்கு வாய்ப்புண்டு

(படம்: Samuel Ang/SNOC)
தென்கிழக்காசிய விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை, சிங்கப்பூர் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கட்டாயம் வென்றே ஆக வேண்டிய
இன்றைய ஆட்டத்தில் சிங்கப்பூர், கம்போடியாவை ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கோல்கணக்கில் வென்றது.
3 ஆட்டங்களில் விளையாடிய சிங்கப்பூர் தற்போது 'B' பிரிவில் முன்னிலையில் உள்ளது. தாய்லந்தும் மலேசியாவும் அடுத்த நிலைகளில் உள்ளன.
மலேசியா இன்று (11 மே) லாவோஸுடன் (Laos) பொருதுகிறது.
சிங்கப்பூர், வரும் சினிக்கிழமை (14 மே) மலேசியாவுக்கு எதிராகப் போட்டியிடும்.