Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளையாட்டு

வலைப்பந்துப் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட சிங்கப்பூர் மகளிர் அணி

வாசிப்புநேரம் -
வலைப்பந்துப் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட சிங்கப்பூர் மகளிர் அணி

படம்: Facebook/Netball Singapore

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் மகளிர் வலைப்பந்து அணி, ஆசிய வலைப்பந்துப் பட்டத்தைத் தக்கவைத்துள்ளது.

இன்று ஹாங்காங்கில் இறுதிப் போட்டி நடந்தது.

57 - 33 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூர் அணி ஹாங்காங்கை வீழ்த்தியது.

இது சிங்கப்பூரின் ஐந்தாவது ஆசிய வலைப்பந்துப் பட்டம்.

சிங்கப்பூர் இந்தத் தொடரில் , மாலத்தீவு, இலங்கை, ஹாங்காங், இந்தியா ஆகிய அணிகளை வீழ்த்தியது.

மலேசியாவிடம் மட்டும் தோல்வி கண்டது.

அரையிறுதியில் இலங்கையை மீண்டும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த வெற்றியின் மூலம், அடுத்த ஆண்டு சிட்னியில் நடைபெறும் வலைப்பந்து உலகக் கிண்ணத்துக்கும் சிங்கப்பூர் தகுதி பெற்றுள்ளது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்